மேஷம்
- Advertisement -
அதிகமான உணர்ச்சிவசம் உங்கள் மனதை நிலையில் வைக்காது, உங்கள் எண்ணத்தை ஒரு நிலையில் வைக்கத் தியானம் செய்வது அவசியமாகும், திறமைக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும், வீட்டில் அன்பு அதிகமாகும். இன்று விளையாட்டுத் துறையில் இருப்பவருக்கு நன்மைகள் அதிகமாகும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் முக்கியத்துவத்தை உணரப்படும். குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியும். திருமண வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். அருமையான நாள்!
- Advertisement -
ரிஷபம்
உங்கள் மனம் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்ய முடிவெடுக்கும், இன்று எதிர்பார்த்த நல்ல தகவல் உங்களை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ஆனால் நீங்கள் தனிமையில் இருக்க விருப்பம் கொள்வீர்கள். உங்கள் மன வலிமையை அசைக்கும் நபரை சந்திக்கும் தருணம் உருவாகும். இளம் வயது ரிஷப ராசிக்குத் திருமண பேச்சு ஆரம்பிக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். மன வலிமை!
மிதுனம்
உங்கள் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும், வீட்டில் சந்தோஷமான நிலை இருந்தாலும் உங்கள் மனம் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் அதிக செலவு செய்ய நேரிடும். திருமண பந்தத்தில் நுழையப் போகும் மிதுன ராசிக்காரரே உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணையால் ஆனந்தம் வரும், அத்துடன் இன்ப செலவு இருக்கும். தொழிலில் வழக்கமான நிலையே இருக்கும். செலவு!
கடகம்
இன்று ஓய்வு நேரம் அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் வெளியே செல்லும் வாய்ப்பு அதிகமாகும். சிலர் புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகமாகும், திடீர் இன்ப அதிர்ச்சி இருக்கும். நட்பு வட்டாரம் நன்றாக உள்ளது. உணவு கட்டுப்பாடு அவசியம், குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏதுவுமின்றி நிம்மதியாகப் போகும். இன்பம்!
சிம்மம்
உன் வாழ்க்கை உன் கையில் என்று தனக்கென சுயத்திட்டங்களை வகுத்து கடுமை உழைப்பை அளிக்கும் உங்களுக்கு இறைவனின் அனுசரணை அதிகமாக உள்ளது. இன்று செல்வம் அதிகமாகும், உங்கள் செல்வ நிலை வளர்ச்சி அடையும். திருமண வாழ்க்கையில் சில சங்கடங்கள் இருந்தாலும் குடும்பத்திற்கான கடமையில் அதிக அக்கறை காட்டும் உங்களை குடும்பத்தினர் புரிந்து கொள்வர். புதிய கல்வி ஞானம் பெறும் யோகம் அதிகமாகும். அதிர்ஷ்டம்!
கன்னி
கடினமான வேலையாக இருந்தாலும் எளிதில் முடிக்கும் யுத்தியை அறிந்த உங்களின் ராசியில் இன்று காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. மாணவர்களின் கல்வி நிலையும் நன்றாக உள்ளது. திருமண வாழ்க்கை உங்களுக்கு ஒரு வரமாகக் காட்சி அளிக்கும் நாள் இன்றாகும். ஆன்மிக ஸ்தலத்திற்குச் செல்வது நன்மை ஆகும். தொழில் சற்று மந்தமாக இருந்தாலும் நஷ்டம் வராது. உங்கள் மனம் தேடும் அமைதி கிடைக்கும், ஆனால் வரவு குறைவாக இருப்பதால் சேமிப்பைச் செலவிடும் நேரம் உருவாகும். தன்னம்பிக்கை!
துலாம்
இன்று நிதி நிலைமையில் குறை ஏதுமில்லை, ஆனால் செலவைக் குறைப்பது நன்மை ஆகும். உங்கள் தகுதிக்கு ஏற்ற சன்மானம் உங்களைத் தேடி வரும். நண்பர்களால் மனம் ஆனந்தமாகும். மனம் இன்று நிம்மதியாக இருக்க உங்கள் நண்பர்கள் ஒரு முக்கியமான காரணமாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வது சுகமாகும். நிம்மதி!
விருச்சிகம்
சிக்கலான சூழ்நிலை ஆயிரம் வந்தாலும் நிதானமாகக் கடக்கும் உங்களின் தெளிவான சிந்தனை இன்று சற்று தடுமாறும் நிலை உருவாகும். காதல் வாழ்க்கையில் சில வேறுபாடு உருவாகும் உடனே மன்னிப்பு கேட்பது உறவைப் பாதிக்காது. சுப விஷேசத்திற்குச் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. உங்கள் வழக்கமான செயல்களில் பாதிப்பு ஏற்படாது, ஆரோக்கியம் நன்றாக உள்ளது, தொழிலில் பிரச்சனை ஏதுமில்லை. வாழ்க்கைத் துணையின் உதவி தேவைப்படும். தடுமாற்றம்!
தனுசு
இன்று உங்கள் நம்பிக்கை சுற்றத்தாருக்கு ஊக்கம் அளித்து அவர்களையும் போராடத் தூண்டும் நாள் ஆகும், மக்கள் உங்கள் மதிப்பைப் புரிந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாகும், வியாபாரம் செய்வோர் கஸ்டமர் இடத்தில் நம்பிக்கை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் குறை ஏதுமில்லை, வருங்கால அவதியிலிருந்து தப்பிக்க உடற்பயிற்சி அவசியமாகும். குடும்ப வாழ்வு நன்றாக உள்ளது. புரிதல்!
மகரம்
உங்கள் வேலைச் சுமை குறைவாக இருப்பதால் மனம் பொழுதுபோக்கை நாடும், வெளியில் செல்லும்போது மனம் ஆனந்தமாகும். பண வரவு இருக்கும். கேளிக்கை நிகழ்ச்சிகள் பார்க்க அதிக நேரம் இருக்கும். வீட்டில் சந்தோஷமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் காட்டுவது நல்லதாகும். திருமண வாழ்வு இனிமை பந்தமாக இருக்கும். புதிய நபர்களைச் சந்திக்கும் நிலை வரும். நேரத்தை அதிகமாக வீணடிக்காமல் சற்று திட்டமிடுவது வருங்கால வேலையைக் குறைக்கும். ஓய்வு!
கும்பம்
சிக்கலான தருணத்தில் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்த உங்களுக்கு இன்றைய தினம் உங்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். உங்கள் நிதி நிலையில் திட்டமிடுதல் அவசியமாகும் ஏனென்றால் செலவு அதிகமாக இருந்து கொண்டிருக்கும். உங்கள் இல்லற வாழ்க்கையைப் பற்றி யாருடனும் பகிர வேண்டாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக உள்ளது. வீட்டில் ஆனந்தமாக இருப்பீர்கள். விரையச் செலவு!
மீனம்
இன்று முழுவதும் மனம் அமைதியாக இருக்கும், அதனால் பழைய சிக்கலான காரியத்திற்குத் தீர்வு காண மனம் சிந்திக்கும். சில உடல் நலக் கோளாறு உருவாகும், அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுகுவது உசிதமாகும். திருமண வாழ்வில் சிக்கலான நாளாகும். இன்று நீங்கள் பூங்கா அல்லது பொழுதுபோக்கு இடத்திற்குச் செல்ல முடிவு செய்வீர்கள். இன்று எதிர்கால முதலீட்டின் மீது ஆர்வம் தோன்றும். திட்டம்!