HomeAstrologyஇன்றைய ராசி பலன் – 31-05-2021

இன்றைய ராசி பலன் – 31-05-2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முடிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தொழில் மற்றும் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. மனைவிவழி உறவினர்கள் ஆதரவு கொடுப்பார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நிறைவேற சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணவரவில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியம் ஒன்று நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் உற்சாகத்தை அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒத்துழைத்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி உறவு சிக்கல் நீங்கும். ஆரோக்கியம் சீராகும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. நிலுவையில் இருந்த சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர் பார்க்கும் படி நடக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளுடன் இணக்கமான நட்பு உறவு ஏற்படும். உத்தியோக ரீதியான விஷயங்களில் கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காலை முதல் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் வீண் பழிகளை ஏற்க இருக்கிறீர்கள் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் கவனம் வேண்டும். –

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுவது தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்ல விஷயத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய புதிய சிந்தனை மற்றவர்கள் பாராட்டும் படியாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காண கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலும் வலுவாகும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த பிணக்குகள் நீங்கும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பணவரவு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையான நேரத்தில் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களின் தொல்லை ஒழியும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும் பரஸ்பர அன்பு மேலோங்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறைவழிபாடு மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கத்தை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறை சிந்தனைகள் அதிகமாக காணப்படும். உங்களை சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவு சிக்கல் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் அழிவர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் பெறும் படியான சூழ்நிலை நிலவும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments