மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் எதிர்பார்த்த படி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வகையில் லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும்.
ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் மந்த நிலை மாறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- Advertisement -
மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சாதகமான பலன்கள் உண்டு.
சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் தடைகளை தாண்டி வெற்றி பெறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை வலுவாகும்.
கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி உறவில் இருக்கும் சிக்கல்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேண்டிய வேண்டுதல்கள் பலிக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மன அமைதி உண்டு.
விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு புதிய புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் இணக்கமாக செல்வீர்கள்.
தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்கள் உடன் இருப்பவர்களே உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துன்பங்கள் தொலையும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் எது என்பதை தெரிந்து கொண்டு செயல்படுவீர்கள். அன்பிற்கு உரியவர்கள் இடமிருந்து சுப செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் தாமதமாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் காண நண்பர்களின் உதவி கிட்டும்.