HomeAstrologyஇன்றைய ராசி பலன் – 7-2-2021

இன்றைய ராசி பலன் – 7-2-2021

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தவற்றிற்கு எதிர்மாறாக சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டாகும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதக பலன்களை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கப்பெறும். புதிய தொழில் முயற்சி செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஏமாறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வழிகள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு நிறைவேற பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை படிப்படியாக நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும். சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வழக்குகள் போன்றவற்றில் சாதகப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றகூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய தொகையை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். பொருளாதார ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் எச்சரிக்கை தேவை. உடனிருப்பவர்களே நம்பிக்கை துரோகம் செய்ய வாய்ப்புகள் இருப்பதால் கவனம் இருப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்தினால் அதிர்ஷ்டம் பெருகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த குழப்பமான மனநிலை நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக வெற்றி உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். இது வரை வசூல் ஆகாத பணம் வசூல் ஆக கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments