இன்றைய ராசி பலன் – 03-02-2021

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்தது ஒன்றாக மற்றும் நடப்பது ஒன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களுடன் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. வீட்டில் கணவன் மனைவி இடையே சிறு கருத்து மோதல்கள் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான பணவரவு கிடைக்கப் பெற இருக்கிறது. நீண்ட நாள் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய வழிகள் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு காத்திருந்த விஷயங்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டாகும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சில காரியங்கள் நடைபெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரித்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். –

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மைகளை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயலாற்றுவது மன அமைதியை சீர்குலைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நினைத்த இடத்தில் நினைத்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் நீங்குவதற்கு வழிகள் பிறக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயன அனுகூலப் பலன்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நன்மைகளை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றங்கள் உண்டாகும். கணவன் மனைவி இடையேயான உறவு சுமுகமாக இருக்கும். –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி புதிய தெளிவு பிறக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் பணிபுரியும் வேலையின் மேல் அக்கறை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரித்து காணப்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்களை துச்சமாக நினைக்கும் மன வலிமை பிறக்கும். எது வந்தாலும் பார்த்துக் கொள்வேன் என்கிற உறுதியான மனோதிடம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் உடன் இருப்பவர்களை உங்களை எதிர்க்கும் வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பிரச்சினை இல்லை. கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசிக் கொள்வது ஒற்றுமையை மேலும் வலுவாக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகி வெற்றிப் பாதை கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன வலிமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்குழப்பம் நீங்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். தடைபட்ட காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு துணையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய தொகைகளின் மூலம் லாபம் கிடைக்கப்பெறும். பெண்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *