இன்றைய ராசி பலன் – 05-01-2021

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் பலவும் உங்களைத் தேடி வந்தடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும், லாபம் கிடைப்பதில் சீரான நிலை இருக்கும். மற்றவர்களிடம் கருத்து திணிப்பை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.

ரிஷபம் – ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுய முடிவு எடுப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். எதையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் இன்றி வெற்றிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்பட்டாலும், ஏதோ ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இனம்புரியாத மன உலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு அமைய இருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும், எதிர்த்தரப்பில் இருப்பவர்களின் இடத்தில் நின்று யோசிப்பது மன அமைதியை கொடுக்கும்.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமையக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத லாபம் காண்பீர்கள். பிள்ளைகள் பற்றிய கவலை மேலோங்கும்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்கள் பாராட்டும் படியான சூழ்நிலை இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலை கொடுக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பீர்கள். அனைவரின் அன்பை எதிர்பார்க்கும் நீங்கள் எதார்த்தத்தை உணர ஆரம்பிப்பீர்கள்.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நீண்டநாள் தடைபட்டுக் கொண்டிருந்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சவுகரியமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகம் செய்பவர்கள் கிடைக்கும் புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஊடல்கள் ஏற்படும்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருக்கிறது. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், பணவரவு கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்த்து, பொறுமையுடன் பேசுவதன் மூலம் மன அமைதி பெறலாம்.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி கிடைத்தாலும் அதில் முழுமையான மகிழ்ச்சியை காண முடியாமல் போகலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் காணப்படும்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைக்கும் விஷயம் ஒன்றாகவும், நடக்கும் விஷயம் ஒன்றாகவும் அமையக்கூடும். எதிர்வரும் சவால்களை சந்திக்க கூடிய மன தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். இருப்பவர்களுக்கு பணியாளர்கள் மூலம் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் அமைதி நிலைக்க, ஈகோ பார்க்காமல் அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை தேவை. வாகன ரீதியான பயணங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கை தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் மன அமைதி கிடைக்கும். இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *