இன்றைய ராசி பலன் – 29-12-2020

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தங்களுடைய எதிரிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் காலம் இது. வெளியிடங்களில் செல்லும்பொழுது உடைமைகள் மீது கவனம் தேவை.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப் பிரச்சினைகள் நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. உற்றார் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முடிவுகளை அவசரம் காட்ட வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை சந்திப்பீர்கள்.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் மன உளைச்சலை கொடுக்கும். ஒரு சிலருக்கு தலைவலி போன்ற தொந்தரவுகள் இருக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள நேரலாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்கள் இடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை. – Advertisement –

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி உங்களை தேடி வரக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி அலுத்துப் போனவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். பெண்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் நிதானம் தேவை.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் நிதானத்துடன் கையாள்வது மிகவும் நல்லது. தாம் தூம் என்று செலவு செய்தால் பின்னர் கஷ்டப்பட வேண்டிய நிலைமை இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது மன அமைதி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களில் கவனம் தேவை. ஒரு முறைக்கு இரண்டு முறை ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடுமையான உழைப்பை கொடுத்த உங்களுக்கு அதற்குரிய பலன்களும் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுடைய மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. போட்டி பொறாமைகள் வலுவாகும். ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைத்தாலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் உதவியை தேடிப் போக வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் சிக்கல்கள் இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கும். பெண்களுக்கு நினைத்தது நடக்கும்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களை இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *